ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி...மேலும் ஒரு இளைஞர் தற்கொலை - ஆன்லைன் ரம்மியால் தற்கொலை

ஈரோட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 5 லட்சம் ரூபாய் இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் இளைஞர் தற்கொலை ; தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்

author img

By

Published : Oct 7, 2022, 10:32 AM IST

ஈரோடு: ஈரோடு கவுந்தப்பாடி சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கோபிசெட்டிபாளையம் கொலப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாதகவும் கூறப்படுகிறது.

இதனால் சுமார் ரூ.5 லட்சம் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த அவர், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் இளைஞர் தற்கொலை ; தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்
ஆன்லைன் ரம்மியால் மீண்டும் இளைஞர் தற்கொலை ; தொடரும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதே தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுதொடரப்க திங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி முன்னால் மற்ற நடிகையுடன் நெருக்கம் காட்டிய அர்ணவ்.. தட்டிக் கேட்ட திவ்யாவின் கருவில் உதை? பரபரப்பு புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.