ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிமுக இன்னும் முடிவு செய்யவில்லை: வைகைச்செல்வன்!

author img

By

Published : Nov 27, 2020, 4:28 PM IST

ஈரோடு: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அதிமுக இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சி செய்தித் தொடர்பாளர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்  அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் செய்தியாளர் சந்திப்பு  ஒரே நாடு ஒரே தேர்தல்  one country one election  AIADMK spokesperson Vaigaichelvan  AIADMK spokesperson Vaigaichelvan press conference
AIADMK spokesperson Vaigaichelvan press conference

ஈரோட்டில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் பல்வேறு கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆனால், இவை அனைத்தும் ஒரே தேர்தல் என்று கூறுவது விவாத பொருளாக மாறியுள்ளது. இதுவொன்றும் கொள்கை முடிவாக அறிவிக்கப்படவில்லை. அதிமுகவை பொறுத்தவரை இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை.

தற்போது வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. நிவர் புயலை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக பணியாற்றி உள்ளது. போர்க்கால அடிப்படையில், துரித நடவடிக்கைகளை எடுத்து எந்தவித உயிர் சேதமும் இல்லாத அளவில் மக்களை அரசு பாதுகாத்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுளோம்.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ பெயரளவுக்கு மட்டும் சில இடங்களுக்குச் சென்று நிவாரண பொருள்கள் வழங்கினார்” என்றார்.

இதையும் படிங்க:மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு- முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.