ETV Bharat / state

அதிமுக நிலையான ஆட்சி அமைக்கும்-அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு: வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Dec 19, 2020, 4:54 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாதம்பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசுகையில், “2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று நிலையான ஆட்சியை அமைக்கும். அதிமுகவிற்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து பேசிய அமைச்சர்:

நீட் தேர்வில் 152 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட மருத்துவர்களாகும் வாய்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில், பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புளியம்பட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கான காரணம் சாலையோரம் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அமைக்கப்படுகிறது

அதிமுக கோட்டை பவானிசாகர்:

பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக கோட்டை என்பதை நாம் அனைவரும் நிரூபிப்போம். வரும் தேர்தலில் தமிழ்நாடு அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்” எனத் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், “இப்பகுதியிலுள்ள குளங்களை இணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம். அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்படாத குளங்களும் சேர்க்கப்படும். இதன் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்” என்றார்.

இதையும் படிங்க: சர்ச்சை பேச்சு! - வருத்தம் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.