ETV Bharat / state

கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் கைது! - erode admk party member arrested

கரோனா விதிமுறைகள் பின்பற்றாதது குறித்துக் கேட்ட நபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிமுக பிரமுகர் கைது
அதிமுக பிரமுகர் கைது
author img

By

Published : Aug 22, 2021, 10:34 AM IST

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளகோயில் பாளையத்தில் கடந்த 14ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம் தனது ஆதரவாளர்களுடன் தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கரோனா காலத்தில் 144 தடை உத்தரவு உள்ள நேரத்தில் இதுபோன்று கூட்டமாக முகக்கவசம் அணியாமல் இருப்பது ஏன் என ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம், இளங்கோவைத் தகாத வார்த்தையில் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, இளங்கோ அளித்த புகாரின் பேரில் நம்பியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று (ஆக.22) அதிகாலை அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

அதிமுக பிரமுகர் கைது

பின்னர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஜே.எம்.2 ல் மாஜிஸ்திரேட் விசுநாதன் முன்பு அவரது வீட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். சுப்பிரமணியம் மீது 143, 294(பி), 269,506(11) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவி: போட்டியின்றித் தேர்வாகும் என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.