ஈரோடு:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1வது வார்டில் அதிமுக சார்பில் நகரச் செயலாளர் மூர்த்தியும், இரண்டாவது வார்டில் அவரது மனைவி கீதாவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 1 வது வார்டில் மொத்தம் 730 வாக்குகள் பதிவானது.
இதில் அதிமுக வேட்பாளர் மூர்த்தி 201 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். அதேபோல் இரண்டாவது வார்டில் 842 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக வேட்பாளர் கீதா 278 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் நந்தினியிடம் தோல்வி அடைந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எடப்பாடி இப்போது திமுகவில்...! - உடன்பிறப்புகள் குஷி