ஈரோடு மாநகராட்சியின் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் விஜயா தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் ஈரோடு பெரியார் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரியார் நகரில் உள்ள நிலா ஃபாஸ்ட் ஃபுட் என்ற கடையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், சானிடைசர் வைக்காமலும் இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து இக்கடைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே காரணத்துக்காக இக்கடைக்கு அருகே இருந்த டீக்கடைக்கும் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 800 ரூபாய் வரை பல்வேறு கடைகளிலிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், முகக்கவசம் அணியாத 350 பேரிடம் 35,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.