ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டையை வழங்காமல், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டை வழங்குவதாக உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை! - காவல் துறை அலட்சியம்... உறவினர்கள் போராட்டம்