ETV Bharat / state

கர்நாடக அரசுப் பேருந்து மோதி விபத்து: ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு! - Thalavadi Karnataka bus Accident

ஈரோடு: தாளவாடி அருகே இருசக்கர வாகனம் மீது கர்நாடக அரசுப் பேருந்து மோதியதில் ஆடு மேய்ப்பவர் உயிரிழந்தார்.

தாளவாடியில் கர்நாடக அரசு பேருந்து மோதி ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு  கர்நாடக அரசு பேருந்து மோதி ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு  Goat herder dead in Karnataka government bus collision  A Man Dead By Karnataka Govt Bus Accident In Thalavadi  Thalavadi Karnataka bus Accident  கர்நாடக அரசுப் பேருந்து விபத்து
Thalavadi Karnataka bus Accident
author img

By

Published : Feb 23, 2021, 3:23 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொங்கள்ளி காலனியைச் சேர்ந்தவர் சித்தராஜ் (55). இவர் ஆடு மாடுகளை பராமரித்து வந்தார். இவரது நண்பர் தேவன். இந்நிலையில் சித்தராஜ் நண்பர் தேவனின் இரு சக்கர வாகனத்தில் பனஹள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆனந்தபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கர்நாடக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், தேவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, விபத்து ஏற்படுத்திய கர்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக தாளவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கர்நாடக பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளிக்க சென்ற இளைஞர் ஆற்றில் சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.