ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வசித்து வரும் 70 வயது முதியவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார், சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், முதியவரை கைது செய்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நேற்று (மார்ச் 17) நீதிமதி மாலதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மாலதி, அம்முதியவருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50000 இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை...103 வயது ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல்