ஈரோடு: பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்றுப் படுகைகளில் நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிருகால், கல்பாசு மற்றும் சேல் கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் நோக்கத்துடன் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தில் பவானி ஆற்றில் நடைபெற்ற மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியில் மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடுவது குறித்து அறிந்து கொள்வதற்காக வரவழைத்து மீன் குஞ்சுகளைப் பவானி ஆற்றில் விட்டனர்.இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்கனவே பவானி ஆற்றில் 11 லட்சம் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல்வேறு ரக நாட்டின 23 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டுள்ளன. ஆற்றில் சாயக்கழிவு காரணமாக மீன் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின மீன் குஞ்சுகள் விடுவதின் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுவது மட்டுமின்றி மக்களுக்குக் குறைந்த விலையில் புரதச் சத்துள்ள மீன் கிடைக்கும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் மீது தாக்குதல்: புஞ்சை புளியம்பட்டி அதிமுக நகர செயலாளர் கைது