ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் பொன்மனைச்செல்வன் (21), பிரதீபன் (16), முருகேஷ் (21). இவர்கள் பெயிண்டிங் வேலைக்கு பண்ணாரி சென்றனர்.
பின்னர் வேலையை முடித்துவிட்டு மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். கொத்தமங்கலம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூன்று பேரும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதில் பொன்மனைச்செல்வம், பிரதீபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த முருகேஷ் என்பவரை சக வாகன ஓட்டிகள் மீட்டு கோவை மாவட்ட அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் இளைஞர்களின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு டேங்கர் லாரி மோதி விபத்து: இருவர் படுகாயம்