ETV Bharat / state

வாக்களிக்கமாட்டோம் என துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்த அச்சக உரிமையாளர், விவசாயி  மீது வழக்குப்பதிவு ! - sathiyamangalam issues

ஈரோடு: வாக்களிக்கமாட்டோம் என துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் விவசாயி மீது கடம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓட்டுப்போடமாட்டோம் என துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சக உரிமையாளர் விவசாயி வழக்குப் பதிவு !
author img

By

Published : Apr 15, 2019, 11:27 PM IST

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மல்லியம்மன்துர்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரப்படாததால் வாக்களிக்கமாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை கடம்பூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது வாக்களிக்கமாட்டோம் என நாங்கள் துண்டுப்பிரசுரம் அச்சடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து மல்லியம்மன் துர்கம் கிராமத்தை சேர்ந்த கல்கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவர் மல்லியம்மன் துர்கம் கிராம பொதுமக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அனுமதியின்றி துண்டுப்பிரசுரம் அச்சடித்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஹரி (55) ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் கடம்பூர் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் கடம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓட்டுப்போடமாட்டோம் என துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் மல்லியம்மன் துர்கம் விவசாயி  மீது கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு

சத்தியமங்கலம், ஏப் 15: 
ஓட்டுப் போடமாட்டோம் என துண்டு பிரசுரம் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் மல்லியம்மன் துர்க்கம் விவசாயி மீது கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மல்லியம்மன்துர்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரப்படாததால் ஓட்டுப்போடமாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை கடம்பூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது ஓட்டு போடமாட்டோம் என நாங்கள் துண்டுப்பிரசுரம் அச்சடிக்கவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து மல்லியம்மன் துர்கம்  கிராமத்தை சேர்ந்த கல்கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணி(52) என்பவர் மல்லியம்மன் துர்கம் கிராம பொதுமக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டு பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அனுமதியின்றி துண்டுபிரசுரம் அச்சடித்த சத்தியமங்கலத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர் ஹரி(55) ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குத்தியாலத்தூர் விஏஓ சீனிவாசன் கடம்பூர் போலீசார் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் கடம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.