சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (38). விவசாய கூலித் தொழிலாளியான இவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் படுத்துறங்கியபோது இரண்டு நபர்கள் அவரின் சட்டை பாக்கெட்டிலிருந்த ஆயிரத்து 200 ரூபாயை பிக்பாக்கெட் அடிக்க முயன்றனர்.
அப்பொழுது, கண்விழித்த பழனிச்சாமி சத்தம் போட்டதால் இருவரும் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து, அப்பகுதியிருந்த மக்கள் இருவரையும் பிடித்து சத்தியமங்கலம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, இருவர் மீது வழக்குப்பதிந்த காவல் துறையினர், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையிலடைத்தனர்.
பிக்பாக்கெட் அடித்த இருவர் கைது! - pick pocket
ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற இருவரை, மக்கள் சாதுரியமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.