ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகம் மாநில எல்லையான தாளவாடியிலிருந்து, அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இரு மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அருள்வாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கடத்தலுக்காக ரேஷன் மூட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தாளவாடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று ஆய்வுமேற்கொண்டனர்.
கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தில், 26 மூட்டைகளில் 1,200 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தப்படத் தயாராக இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அமச்சவாடியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷை (36) கைதுசெய்தனர். பறிமுதல்செய்த ரேஷன் அரிசியை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கொள்ளையில் ஈடுபட்ட நால்வரைப் பிடித்த காவல் துறையினர்; ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு