ஈரோடு: சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 30 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தக் கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, மற்ற ஊராட்சி ஒன்றியங்களைக் காட்டிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக, குற்றம்சாட்டி இன்று(அக்.08) 2000-க்கும் மேற்பட்ட நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதவை பூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிஒன்றியகீழ்நிலை அலுவலர்களிடம் மனு அளித்தனர். இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பும் 1000-க்கும் மேற்பட்ட நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:வரலாறு திரும்பியது.. மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா!