சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாகத் தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மருந்து பொருள்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் இரண்டு மாநிலங்களுக்கிடையே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் சரக்கு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10 அடி நீள மலைப்பாம்பு திம்பம் மலைப்பாதையைக் கடப்பதற்காக மெதுவாக ஊர்ந்து சென்றது. இது காண்போரை பதைபதைக்கச் செய்தது.
சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாம்பு மெதுவாகச் சாலையைக் கடந்து பாம்பு வனப்பகுதிக்குச் செல்லும்வரை காத்திருந்து, மீண்டும் வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் மரணங்கள்: ஒரே நாளில் 4,529 பேர் உயிரிழப்பு!