திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிழ்மலை கிராமம் கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் முருகன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர், கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!