திண்டுக்கல்லை சேர்ந்த குமார் (52) என்பவர் கரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பணம் கையாடல் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று(ஜூலை.8) மாவட்ட வன அலுவலகத்திற்கு மது போதையில் வந்த குமார், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலரிடம் தனக்கு பாதி சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு அலுவலகத்தில் முறையான பதில் இல்லாத காரணத்தினால் வெளியே வந்த குமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்காயங்கள் அதிகமாக இருப்பதால் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிணையில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை!