தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரக்கூடிய நிலையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிய அரசு அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு வகையான முகக்கவசங்கள் தயாராகி வருகின்றன.
ஆனால், ஆரோக்கியமான முகக்கவசங்கள் தயாரிக்கும் முயற்சி பலரிடம் இல்லை. தற்போது திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் முகக்கவசங்கள் தயாரிப்பதில் புது முயற்சியை முன்னெடுத்திருக்கின்றனர்.
ஏற்கெனவே இவர்கள் மூலிகை சோப்பு போன்றவற்றை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், முகக்கவசங்களை வித்தியாசமாக தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பின்னர் அவர்களே முகக்கவசங்களைத் தயார் செய்து, அதில் வெட்டிவேர் வைத்து மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் முகக்கவசங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த முகக்கவசங்களை பயன்படுத்தும் மக்கள் அதனைத் துவைக்க தேவையில்லை. சுடு தண்ணீரில் ஆவி பிடித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம் என அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் தயாராகும் இந்த முகக்கவசங்கள் பலருக்கும் அறிமுகம் இல்லாத நிலையில் உள்ளது. எனவே, மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என அரசிற்கு அப்பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு