திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளான எரிச்சாலை, பிரையண்ட் பூங்கா பகுதி, கலையரங்கம் பகுதி, அப்பர் லேக் வியூ சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.
அந்த இடங்களில் பயன்பாட்டிலிருந்த நடமாடும் கழிப்பறைகள் சில ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதியடைந்துவருகின்றனர்.
![கொடைக்கானலில் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் நடமாடும் கழிப்பறைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-02-kodaikanal-toilet-pho-spt-tn10030_27122020194848_2712f_1609078728_167.jpg)
மேலும் இவ்வாறாகச் சுகாதாரம் இன்றி காணப்படுவதால் கழிப்பறைகளைச் சுற்றிலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறிவருகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் நடமாடும் கழிப்பறைகளைப் பராமரிக்க வேண்டுமெனவும், கூடுதலாக நடமாடும் கழிப்பறைகள் கொடைக்கானல் நகர்ப் பகுதி, சுற்றுலா இடங்களில் அமைக்கப்பட வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி