புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், கொடைக்கானல் பிரதான சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக போரட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்!