இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் அடிப்படை அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உணவு, காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை பயன்படுத்தி சிலர் அதிகப்படியான விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சியின் சார்பாக நகரில் உள்ள ஐந்து இடங்களில் காய்கறிகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி கலையரங்கம், அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், அரசு மேநிலைப் பள்ளிவளாகம், செண்பகனூர் ஆகிய ஐந்து இடங்களில் காலை ஒன்பது மணி முதல் பகல் 2.30 மணி வரை காய்கறிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் பொருட்டு தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள் நேரடியாக வாங்கப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:திருவேற்காட்டில் 113 வயது ஸ்ரீலஸ்ரீ அய்யப்பசுவாமிகள் இயற்கை எய்தினார்