திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று(பிப்ரவரி 14) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒரு செங்கல்கூட எடுத்துவைக்கவில்லை எனவும் மோடியை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தார்.
சசிகலாவின் காலை பிடித்துதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செயய்ப்படும், கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும், பழனி மாற்று வழிப்பாதை, கொடைக்கானல் மூணாறு சாலை இணைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
தொடர்ந்து மூஞ்சிக்கல் பகுதியில், பரப்பரையில் ஈடுபட்டபோது, கொடைக்கானலுக்கு மல்டிலெவல் பார்கிங் அமைக்கப்படும் என்றும் பழனி முதல் கொடைக்கானல்வரை ரோப் கார் திட்டம் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஸ் அபூர்வ சகோதரர்கள்' -கமல்!