திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த மலைப்பட்டி சேர்ந்தவர்கள் கருப்பையா மற்றும் கங்காதரன். வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வரும் இவர்கள் இன்று (ஜூன் 15) சிலுவத்துார் ரோடு பாலம் அருகே உள்ள பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே சம்பளம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கங்காதரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கருப்பையா ராஜாக்கா பட்டியைச் சேர்ந்தவர் என்றும், இவருக்கு திருமணமாகி 22 நாள்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட உடன் பணிபுரியும் இரண்டு நபர்களை தாலுகா காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மதுபானக் கடையில் குடையுடன் குவிந்த குடிமகன்கள்!