காவல்துறையில் பணியில் உயிரிழந்தவர்களின் நினைவை அனுசரிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல்துறை சார்பில் மறைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் கடந்த 1993ஆம் ஆண்டு பழனியை சேர்ந்த தயாளன் என்ற காவலர் சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே வனப்பகுதியில் வீரப்பனை தேடி அலைந்தபோது, வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர் தயாளன் வீட்டிற்கு சென்ற பழனி துணை காவல் கண்காணிப்பாளர் சிவா தலைமையிலான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படை காவலர்கள், தயாளன் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஜவ்வரிசி கலப்படத்தை தவிர்க்க ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள்’ - தமிழ்மணி