திண்டுக்கல்: கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறையின் சார்பாக பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் செட்டியார் பூங்கா தற்போது பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. பூங்காவில் பூக்களே இல்லாத நிலையில் பூங்காவை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில், நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே சென்று பார்க்கும் போது பூக்களே இல்லாத சூழலும், முறையாக பராமரிப்பு இன்றி உள்ளதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பராமரிப்பின்றி இருக்கும் செட்டியார் பூங்காவை சீரமைத்து, தேவையான வசதிகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் தைப்பூச திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்