திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு, சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் முக்கிய பகுதியான ஏரிச்சாலையில் படகு சவாரி, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றிக்கு தடை நீடித்து வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், அப்பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
எனவே ஏரிச்சாலை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தவேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.