ETV Bharat / state

கொடைக்கானல் புதிய கட்டுப்பாடு - சுற்றுலாப் பயணிகள் குழப்பம் - etv bharat

கொடைக்கானலில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் குழப்பம்
சுற்றுலாப் பயணிகள் குழப்பம்
author img

By

Published : Aug 6, 2021, 8:09 PM IST

திண்டுக்கல்: கடந்த இரண்டு மாதங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் உடன் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

நெகட்டிவ் சான்றிதழ்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் கொடைக்கானலுக்கு வரக்கூடியவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

மேலும் கொடைக்கானலில் அடைக்கபடாமல் திறந்த வெளி சுற்றுலாத் தலங்களான கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ், வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை இன்று (ஆக. 6) அமலுக்கு வந்தது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்களது அறைகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் குழப்பம்

குறிப்பிட்ட இடங்களுக்கு அனுமதி

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.