ஆத்தூர் வட்டத்தில் அய்யம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள வலையர் தெரு 11வது வார்ட்டை சேர்ந்த வெள்ளையன் என்பவரது மகன் முத்துராஜா(31). இவர் கடந்த 03.10.2020 அன்று திண்டுக்கல்லை சேர்ந்த 8 வயதுள்ள சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்த குற்றத்தின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் முத்துராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முத்துராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், முத்துராஜாவை பாலியல் குற்றவாளி என்ற முறையில் தடுப்புக்காவலில் வைக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆட்சியருக்கு வழங்கிய பரிந்துரையை ஏற்று முத்துராஜாவை தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துராஜா மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
பாலியல் குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் சட்டம் - CHILD HARASSMENT
திண்டுக்கல்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக போக்சோவில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.