ETV Bharat / state

அஜித்தின் 'ஜி' பட பாணியில் களமிறங்கிய மன்சூர் அலிகான்! - NAMTAMILAR

திண்டுக்கல்: நாதக சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், மக்கள் மத்தியில் கதாநாயகனாய் மாறி தல அஜித்தின் 'ஜி' பட பாணியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மன்சூர் அலிகான்
author img

By

Published : Mar 31, 2019, 12:10 PM IST

தமிழ் சினிமாவில் முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்தவர் மன்சூர் அலிகான். சினிமாவில் தான் வில்லனாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து சமூக அக்கறையுடன் மக்களின் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை கூறி மக்கள் மனங்களில் நாயகனாய் உருவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இவர், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி மக்களை சந்தித்து தனது பரப்புரையை தொடங்கினார்.

இளநீர் வியாபாரம் செய்தல், வீட்டில் உள்ள பெண்களுக்கு தேங்காய் சட்னி அரைத்து கொடுத்தல், காலணி தைக்கும் தொழிலாளியுடன் சேர்ந்து காலணிகளை தைத்துக் கொடுத்தல், டீ மாஸ்டராய் மாறி தேநீர் அளித்தல் என பல்வேறு வகைகளில் நூதன முறையில் பரப்புரை செய்துவந்தார்.

இந்நிலையில், நத்தம் தொகுதியில் உள்ள கோபால்பட்டி வாரச்சந்தையில் நேற்று மாலை மன்சூர் அலிகான் பரப்புரை செய்தார்.அப்போது, வண்ணக்கோழி குஞ்சுகள் விற்பனை செய்தார். இதன் பின்னர்காய்கறி கடையில் விற்பனையாளராய் மாறி பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை வராது என விழிப்புணர்வு பரப்பரையுடன் சேர்த்து தேர்தல் பரப்புரையும் செய்தார்.

முன்னணி கட்சி வேட்பாளர்கள் வாகனங்களில் சென்று மேடைகள் அமைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் நடிகர் என்ற தலைக்கனம் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர் வாக்கு சேகரிப்பது அனைத்துத் தரப்பினரையும் வெகுவாய் கவர்ந்துள்ளது.

திண்டுக்கல் 

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகான் நத்தம் பகுதியில் கோழிகள் மற்றும் பாகற்காய் விற்பனை செய்து பிரச்சாரம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். இதற்கு முன்னால் இளநீர் வியாபாரியாகவும் வீட்டில் உள்ள பெண்களுக்கு தேங்காய் சட்னி அரைத்து கொடுத்தும் செருப்பு தைக்கும் தொழிலாளியுடன்  சேர்ந்து காலணிகளை தைத்துக் கொடுப்பது மற்றும் டீ மாஸ்டர் என பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்து வந்தார்.

இதைத்தொடர்ந்து  நத்தம் தொகுதியில் உள்ள கோபால்பட்டி வாரச்சந்தையில் பிரச்சாரம் செய்த மன்சூர் அங்கு கலர் கோழி குஞ்சுகள் விற்பனை செய்தும்.  பின்  பாகற்காய் சாப்பிட்டால் சர்க்கரை வராது என்று கூறி வியாபாரம் செய்தார். சந்தை பகுதி முழுவதும் மற்றும் வீடுகள் தோறும் சென்று வாக்குகள் சேகரித்தார். பல முன்னணி கட்சி வேட்பாளர்கள் வாகனங்களில் சென்று மேடைகள் அமைத்து  வாக்குகள் சேகரித்து வரும் நிலையில் மக்களோடு மக்களாக இருந்து வாக்குகள்  சேகரிப்பது பிரபலமாகி  வருகிறது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.