திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கருக்காம்பட்டியை சேர்ந்த மருதாயி (50) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன் கணவர் ஓமனந்திடம், ஏடிஎம் கார்டை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வருமாறு அனுப்பினார்.
பணம் எடுக்க தெரியாத அப்பாவி
அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அங்கே நின்றிருந்த ஒருவரிம் தனது கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்நபரும் பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு ஏடிஎம் கார்டை திரும்ப கொடுக்கும்போது போலியான கார்டை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இதனையறியாத ஒமனந்த், அந்தக் கார்டை வாங்கி கொண்டு சென்றுவிட்டார். மீண்டும் சமீபத்தில் பணம் எடுக்கச் சென்றபோது கார்டு செயல்படாமல் இருந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த ஒமன்ந்த், வங்கியில் சென்று விசாரித்தபோது இது உங்களது கார்டு இல்லை என்றும், உங்கள் கார்டின் மூலம் 65 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. உடனே வேடசந்தூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்த நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிக்கிய திருடன்
தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை காவல் துறையினர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த ஆபேல் பாலா என்பவர் ஏடிஎம் முன்பாக சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
அவரை அழைத்து வந்து விசாரணை செய்தபோது வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இதேபோல் பணம் எடுக்கத் தெரியாமல் வருபவர்களிடம் ஏமாற்றி பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
பலே திருடன் கைது
இதனையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் 1 லட்சம் ரூபாய் பணத்தையும், 4 போலி ஏடிஎம் கார்டையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மளிகைக்கடையில் கள்ளச்சாராயம் விற்பனை - ஒருவர் கைது!