திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் இயங்கிவரும் தக்காளிச் சந்தைகள் தமிழ்நாடு அளவில் மிகவும் பிரபலமானவை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் தக்காளி வாங்கிச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும் போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததன் காரணமாகவும் இந்த வருடம் தக்காளி சாகுபடி மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது.
இயல்பாக நாள் ஒன்றிக்கு ஆறு முதல் ஏழு டன் வரை வியாபாரம் நடக்கக்கூடிய தக்காளி சந்தைகளில் இம்முறை வெறும் கிலோ கணக்கில்தான் தக்காளி வரத்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் தக்காளி விலை கடும் உயர்வைக் காணவுள்ளது.
தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதால் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இருப்பினும் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் சமையலுக்கு தக்காளியைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.