தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 562 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33ஆயிரத்து 239ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமீபத்தில் இ-பாஸ் பெற்று சென்னையில் இருந்து, தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது சோதனைச் சாவடியில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கொடைக்கானலில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.