ETV Bharat / state

‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ - திண்டுக்கல் சீனிவாசன்

மரம் வளர்க்கும் திட்டத்தில் தான் மோசடி செய்யவில்லை என உறுதியானால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் பகிரங்கமாக மண்ணிப்புக் கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

மலைக்கோட்டை மரம் வளர்க்கும் திட்டத்தில் நான் மோசடி செய்யவில்லை என உறுதியானால் அவர்கள் அரசியலை விட்டு விலக வேண்டும் -  திண்டுக்கல் சி. சீனிவாசன்

author img

By

Published : Sep 28, 2022, 9:44 PM IST

திண்டுக்கல்: மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலை, நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது வனத்துறை அலுவலர்கள் மூலம் 5ஆயிரம் மரக்கன்றுகளில் சுமார் ஆயிரத்து 250 மரக்கன்றுகள் மலையின் மேல் பகுதியிலும், மீதம் உள்ளவை மலையில் கீழ் பகுதியிலும் நடவு செய்யப்பட்டன.

2019ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் மற்றும் 2019ஆம் ஆண்டில் மலையில் ஏற்பட்ட தீ விபத்தினாலும் மரக்கன்றுகள் சேதமடைந்தன. அவை போக மீதமுள்ள மரக்கன்றுகள் அங்கு உள்ளன. வனத்துறை மூலம் கணக்கு எடுக்கப்பட்டு செலவு செய்தது போக மீதம் உள்ள நிதியின் தொகையை வனத்துறை அதிகாரிகள் மூலம் அரசுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டது.

உண்மை இப்படி இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் புகார் கொடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தாலே அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்திருக்கும்.

மலைக்கோட்டை மரம் வளர்க்கும் திட்டத்தில் நான் மோசடி செய்யவில்லை என உறுதியானால் அவர்கள் அரசியலை விட்டு விலக வேண்டும் - திண்டுக்கல் சி. சீனிவாசன்

மரம் நட்டது யார், பராமரிப்பது யார் என தெரிந்து கொள்ளாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொய்யான தகவலை என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் செய்துள்ளனர். மலைக்கோட்டை மரம் வளர்ப்பு திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டில் உன்மை இல்லை என தெரிந்தால் அவர்கள் அரசியலை விட்டு விலக வேண்டும். மேலும், என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொடைக்கானல் சிறுவன் ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.