திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மகன் தன்னை தாக்கி விட்டதாகவும், உடனே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மருத்துவமனைக்கு செல்லாமல் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து தாங்கள் விசாரித்துக் கொண்டிருந்த மற்ற புகார்களை நிறுத்தி விட்டு உடனடியாக மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் தான் அடிக்கவில்லை என்றும், கதவை தள்ளியதாகவும், கதவு போய் மோதி விட்டது என்று கூறினார். பின்னர் அப்பெண்ணை காவல்துறையினர் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் - மினி லாரி மோதல் - சிசிடிவி காட்சி