திண்டுக்கல்: செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் வாராந்திர ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு திண்டுக்கல், தேனி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆட்டு சந்தைக்கு கொண்டு வருவார்கள்.
சந்தையில் கூட்டம் கூடுவதால் தொற்று பரவ வாய்ப்பிருப்பதாகவும் சந்தை நடைபெறுவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், செம்பட்டியில் இன்று (மே 7) நடைபெற இருந்த ஆட்டுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கூடும் இந்த சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. தகவல் அறியாத வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து சந்தை செயல்படாததால் மீண்டும் கொண்டு சென்றனர். ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் இந்த சந்தை கரோனா பரவல் தடுக்கும் விதமாக சந்தை மூடப்பட்டுள்ளதால் ஆடுகளை விற்க முடியாமல் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்!