ETV Bharat / state

ஊரடங்குத் தளர்வும் கொடைக்கானலும்: 'கடைகள் இருக்கு... வாங்கிச் சாப்பிட ஆள் இல்லை!' - the tea shops in kodaikanal were not opened due to curfew

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால், ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

kodaikanal
kodaikanal
author img

By

Published : May 11, 2020, 4:21 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், 34 வ‌கையிலான‌ க‌டைக‌ள், உண‌வ‌க‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை திற‌ப்ப‌த‌ற்கு க‌ட்டுப்பாடுக‌ளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்கப்படும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பிற கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், திண்டுக்க‌ல் மாவட்டம், கொடைக்கான‌லில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஒரு சில‌ கடைக‌ள் மற்றும் உண‌வ‌க‌ங்க‌ள் ம‌ட்டுமே திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வரவு இல்லாததால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் டீக்க‌டைக‌ள், உண‌வ‌க‌ங்க‌ள் ஆங்காங்கே செயல்படுகின்றன. உணவகங்களில் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, பார்சல் வாங்க வருபவர்களிடம் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

கொடைக்கானலில் மூடிக் கிடக்கும் கடைகள்

இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கூறுகையில், "சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் யாரும் கடைகளைத் திறக்க ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், இங்குள்ள மக்கள் வந்து வாங்குவது மிகக்குறைவு. இங்குள்ள கடைகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி தான் பிழைப்பு ஓடுகிறது. அதனால்தான் தளர்வு அறிவித்த போதிலும் யாரும் கடைகளைத் திறக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.