சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால், அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, காவல் துறையினர் அங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதையடுத்து திண்டுக்கல், கரூர், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கரோனா ஒழிப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட முனியசாமி, இன்று திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி அவர், சம்சுதீன் காலணி, ஏ.எஸ்.எம். பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மாவட்ட கூடுதல் காவல் துறை இயக்குநர் அபய்குமார் சிங், பழனி சார் ஆட்சியர் உமா, வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் கருவிகளில் கோளாறு - மேற்கு வங்க அரசு குற்றச்சாட்டு!