ETV Bharat / state

உயிரை குடிக்கும் தார் தொழிற்சாலையை மூடுங்க..! - கிராம மக்கள் போராட்டம் - THAR_FACTORY

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே நச்சுப் புகையை வெளியேற்றி வரும் தார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை
author img

By

Published : May 14, 2019, 10:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் அப்பகுதியில் தார் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். தொழிற்சாலை அருகில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தார் தொழிற்சாலையால் கிராம மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தார் தொழிற்சாலையை மூடக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சில நாட்கலுக்கு முன்பு தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால், இப்பகுதியை சேர்ந்த ஒருவர் மூச்சு விட முடியாமல் இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த காமாட்சிபுரம் கிராம மக்கள் தார் தொழிற்சாலையை மூடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கிராம மக்களின் போராட்டத்தினை அரசு கண்டுக் கொள்வதாக தெரியவில்லை. இதனால், விரக்தியடைந்த காமாட்சிபுரம் மக்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்காமல் இந்தத் தேர்தலை புறக்கணித்தனர்.

தார் தொழிற்சாலை -பொதுமக்கள் போராட்டம் -

இதையடுத்து தார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் ஒட்டன் சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி தார் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக வருவாய் துறை அதிகாரி பிரியாவிடம் காமாட்சிபுரம் கிராம மக்கள் முறையிட்டனர். பின்னர் இந்த தொழிற்சாலையை மூட வில்லை என்றால், தங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீயிட்டு எரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Intro: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நச்சுப் புகை பாதிப்பை ஏற்படுத்தும் தார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நிர்வாகம் முயற்சித்ததால் பொதுமக்கள் முற்றுகை

நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் செயல்படுவதாக பொதுமக்கள் வாக்குவாதம்

Body:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் &பழநி
ம.பூபதி. மே:13

நச்சுப் புகையால் பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் தார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நிர்வாகம் முயற்சித்ததால் பொதுமக்கள் முற்றுகை

நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஐ பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம் இங்கு பழனியை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகின்றது இங்கு தயாரிக்கப்படும் தாரினால் கிளம்பும் நச்சுப்புகையால் இந்த தொழிற்சாலை அருகில் 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இங்கு சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த தார் தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சுத்தன்மை உடைய புகையினால் நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் இதன் பின்னரும் இந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகின்றது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த ஒருவர் மூச்சு திணறலால் இறந்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொழிற்சாலையை மூடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர் ஆனால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் இப்பகுதி மக்கள் புறக்கணிப்பு செய்தனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் இந்த தொழிற்சாலையை இயக்கத் தொடங்கினார் இதை அடுத்து இப்பகுதி மக்கள் இன்று ஒன்று திரண்டு தொழிற்சாலையை முற்றுகையிட்டனர் இதில் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி மற்றும் வருவாய் துறை அதிகாரி பிரியா கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனால் நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி பேசுவதாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கை இல்லை என்றால் தங்களது ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீயிட்டு எரிப்போம் என்று கூறியுள்ளனர்

பேட்டி: வசந்தா- பொதுமக்கள்

Conclusion:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கார் தொழிற்சாலை பல்வேறு போராட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென அனுமதியின்றி செயல்படும் தொடங்கியதால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பொதுமக்களுக்கும் வாக்குவாதம் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு பதட்டம் அதிகரிப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.