ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் உலா வரும் கடன் செயலி விளம்பரங்கள்..  பாரத் ஓஎஸ் நிறுவனர் கார்த்திக் அய்யர் எச்சரிக்கை..

ஆன்லைன் ரம்மி என்பது திறமைக்கான விளையாட்டு அல்ல என்றும் அது அதிஷ்டத்துக்கான விளையாட்டு என்றும் பாரத் ஓஎஸ் நிறுவனர் கார்த்திக் அய்யர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் உலா வரும் கடன் செயலி விளம்பரங்கள்!

author img

By

Published : Mar 11, 2023, 5:51 PM IST

திண்டுக்கல்: சமீபகாலமாக தமிழ்நாடு உள்பட நாட்டின் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பற்றி கார்த்திக் அய்யர் அளித்த சிறப்பு பேட்டி

அதே நேரம் பலரின் தற்கொலைக்கு காரணமாகும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதா, சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதற்கு தொழில் நுட்ப வல்லுநர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாரத் ஓஎஸ் நிறுவனரும், தொழில்நுட்ப வல்லுநருமான கார்த்திக் அய்யர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “ஆன்லைன் ரம்மி நிறுவனங்களில் சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் என்னும் தொழில்நுட்பம் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இந்த சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் என்னும் தொழில் நுட்பம் திறமை உள்ளவர்களையும், திறமை இல்லாதவர்களையும் வெற்றி பெறச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூடோ ரேண்டம் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் திறமைக்கு வாய்ப்பு கிடையாது. இதில் திறமை உள்ளவர்களும், திறமை இல்லாதவர்களும் விளையாடினால் அனைவருக்கும் ஒரே வாய்ப்பு மட்டுமே கிடைக்கும்.

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் நோக்கம் பணம் சம்பாதிக்கும் முயற்சி மட்டுமே. எனவே, புதிதாக விளையாட்டில் ஈடுபடுவோரை வெற்றி பெறச் செய்வார்கள். தொடர்ந்து அந்த விளையாட்டில் மூழ்க வைக்கும் நிலை உள்ளது. விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆசையைத் தூண்டும் வகையில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் தொடர்ந்து தோல்வி பெறச் செய்வது என்பதும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களில் தோல்வி பெறும் நேரங்களில் எல்லாம், மீண்டும் ஆசையைத் தூண்டும் வகையில் லோன் அப்ளிகேஷன்களை விளம்பரமாகக் கொடுக்கின்றனர். இதன் மூலம் பணம் கடன் பெறச் செய்து, மீண்டும் அவர்களை விளையாட்டில் ஈடுபட வைக்கிறார்கள்.

இதன் காரணமாக தொடர்ந்து கடன் பெற்று, விளையாட்டில் தோல்வி அடைந்து தற்கொலை செய்யும் சூழல், விளையாட்டில் ஈடுபடுவோர் மத்தியில் தற்போது அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது திறமைக்கான வாய்ப்பு கிடையாது. இது அதிஷ்டத்துக்கான விளையாட்டு மட்டுமே. எனவே இந்த விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஸ்டாலினும், ஆளுநரும் நாடகம் - சி.வி.சண்முகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.