திண்டுக்கல் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் மின்வாரியத்தின் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான பிரிவின் ஒப்பந்த முறை ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய மின்வாரிய தொழிலாளர்கள், 15 ஆண்டுகளாக மின் வாரியத்தில் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு இதுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. மேலும் தினசரி ஊதியமாக 380 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்குமாறு தெரிவித்து அனுப்பிவைத்தனர்.
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு - மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்
திண்டுக்கல்: மின் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.