கொடைக்கானல் அருகே சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, வெள்ளகெவி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியூர், கடப்பாறைகுழி, சின்னூர் காலனி ஆகிய மலை கிராமங்கள். சாலை வசதியே இல்லாத இந்த மலை கிராமத்திற்கு துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்த ஆய்வின்போது பெரியூர், சின்னூர் காலனி பகுதிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டுமெனவும், அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீர் வசதிகள் போன்றவற்றை செய்து தர வேண்டுமெனவும், துணை ஆட்சியரிடம் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கேயே அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், குறைகளை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களாக அளிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இதில் அரசு அலுவலர்கள், மருத்துவக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா வந்தா பயப்பட வேண்டாம்... நாடக கலைஞர்களின் விழிப்புணர்வு நாடகம்