திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியிலுள்ள புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தின் 100ஆவது ஆண்டு விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து நேற்று (பிப். 14) பகல் இரவு தேர்த்திருவிழாவும் சப்பர பவனியும் நடைபெற்றது. இந்த விழாவில், தேவாலயங்களைச் சேர்ந்த அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள், ஏராள மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அப்போது, அந்தோணியாரின் மின் அலங்காரத் தேர்ப்பவனி சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: ”வருகின்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல்” - எல்.முருகன்