ETV Bharat / state

ஒருபுறம் விவசாயம், மறுபுறம் கற்பித்தல் பணி: எடுத்துக்காட்டாக திகழும் அரசுப் பள்ளி ஆசிரியர்! - காசம்பட்டி கிராமம்

ஒருபுறம் ஆசிரியர் பணி, மற்றொரு புறம் விவசாயம் என இவ்விரண்டையும் மன மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் சுரேஷ். தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒருசேர விளக்கி விவசாயத்தின் சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறார்.

விவசாயம் செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்
விவசாயம் செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்
author img

By

Published : Jul 1, 2021, 9:58 AM IST

Updated : Jul 2, 2021, 4:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஆசிரியர் சுரேஷ். மதுரை மாவட்டம், பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியோடு தனது குடும்ப பாரம்பரியத் தொழிலான மா விவசாயத்தையும் இவர் மேற்கொண்டு வருகிறார். ஒருபுறம் ஆசிரியர் பணி, மற்றொரு புறம் விவசாயம் என இவ்விரண்டையும் மன மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் சுரேஷ்.

விவசாயம் - மன நிம்மதி

இது குறித்து ஆசிரியரும் விவசாயியுமான சுரேஷ் கூறுகையில், "எனது தந்தை மதுரையில் காவலராக பணிபுரிந்தவர். காசம்பட்டி கிராமம் எங்களுக்கு பூர்வீகம். ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தை எங்களை கிராமத்திற்கு அழைத்து வந்துவிடுவார். பொதுவாக, திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பரளி, நத்தம் பகுதிகளில் மா விவசாயம் அதிகம் செய்வார்கள். இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வகையான மா வகைகள் விளைகின்றன. கல்லாமை, பங்கனபள்ளி, பாலாமணி வகைகள் அதிகம் விளையும்.

விவசாயம் செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்

விவசாயப் பணி எனக்கு மிகுந்த மன நிம்மதி தருகின்ற ஒன்றாகும். 25 ஏக்கர் நிலத்தில் மா விவசாயம் செய்கிறேன். ஆசிரியர் பணி, விவசாயப் பணி இரண்டையுமே நான் எப்போதும் சுமையாகக் கருதியதில்லை. இரண்டுமே இங்கு அவசியம். எனது வாழ்வியலாக நான் இவற்றை மாற்றிக்கொண்டேன். என்னுடைய மாணவர்களுக்கும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கூறுவேன். விவசாயத்தை எனது தாயாரும், மனைவியும் மிகப் பொறுப்போடு கவனித்துக் கொள்கிறார்கள். என் தந்தை எனக்கு செய்தார்கள், நான் இப்போது என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். எனக்குப் பிறகு என் பிள்ளைகள் இதைத் தொடர்வார்கள்" என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு.

ஆசிரியர் சுரேஷுக்கு பாரதி, நன்மதி, தமிழ் குமரன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் மா விவசாயத்தின் நுட்பங்களை மிக அழகாகவும் எளிமையாக புரியும்படியும் கற்றுக் கொடுக்கிறார். மூவரும் எந்தப் படிப்பு பயின்று வேலைக்குச் சென்றாலும் விவசாயத்தை கைவிட்டு விடக்கூடாது என்பதில் உறுதி காட்டுகிறார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் ஆசிரியரின் மகன் தமிழ் குமரன் இது குறித்து கூறுகையில், ”மா வகைகள் குறித்து அப்பா எனக்கு சொல்லித் தருவார். அவற்றை எவ்வாறு தரம் பிரித்து இனம் காணுவது என்பதை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். களை பிடுங்குவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற உதவுகளும் செய்வோம்" என்றார்.

கணவர் கற்றுக் கொடுத்தது

ஆசிரியரின் மனைவி மஞ்சுளா இது குறித்துப் பேசுகையில், "எனக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. திருமணமாகி வந்த பின்னர் தான் எனது கணவர் கற்றுக் கொடுத்தார். எனது மாமனாரும், மாமியாரும் நன்கு விவசாயம் தெரிந்தவர்கள். இதுதான் எங்கள் குடும்பத்தின் அடையாளம். நாங்கள் மா விவசாயத்தை குடும்பத்துடன் மிகுந்த அக்கறையோடு செய்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: மரம் செய விரும்பு' - ஊரடங்கு காலத்திலும் ஊருக்காக வாழும் நண்பர்கள்

Last Updated : Jul 2, 2021, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.