ETV Bharat / state

கரோனா அச்சம்: ஒட்டன்சத்திரம் சந்தையில் எஸ்.பி. ஆய்வு!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திர சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து கரோனா அச்சம் காரணமாக அவை மூன்றாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

author img

By

Published : May 14, 2020, 2:29 PM IST

Updated : May 15, 2020, 12:09 PM IST

காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை துச்சமாக நினைத்து சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். அதன் விளைவால் தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது செயல்பட்டுவரும் ஒட்டன்சத்திரம் காய்கறிச்சந்தையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என எவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சாதாரண நாள்களின் இருப்பதுபோல் கூட்டம் கூட்டமாகக் கூலாகச் சுற்றிவந்தனர்.

அதிலும் குறிப்பாக மதிய நேரத்தில் தற்காலிகமாக இயங்கும் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய சந்தையில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை, அங்கிருந்த காவல் துறையினரும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ஒட்டன்சத்திரம் ↔ கோயம்பேடு!

இந்த ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து சென்னை கோயம்பேடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களின் சந்தைகளுக்கு காய்கறிகள் நாள்தோறும் அனுப்பப்பட்டுவருகின்றன.

நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து நமது ஈடிவி பாரத் சார்பில் பொதுமக்களை எச்சரிக்கும்விதமாக கோயம்பேடுபோல் மாறும் ஒட்டன்சத்திரம் சந்தை என்று செய்தி வெளியிட்டதோடு மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கரோனோ தடுப்பு நடவடிக்கையாக ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மூன்று காய்கறிச் சந்தைகளைப் பிரித்து நடத்த மாவட்ட சார் ஆட்சியர் உத்தரவிட்டதன்பேரில் அவை மேலும் மூன்று இடங்களில் ஏற்படுத்தப்பட்டு சந்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதைத்தொடர்ந்து, சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில் இன்று (மே 14) மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேல், நகராட்சி ஆணையர் தேவிகா இருவரும் சந்தைப் பகுதிகளில் ஆய்வுசெய்தனர்.

பின்னர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, கூடுதலாக தென்றல்நகர், சின்னக்குளம், மலையடிவாரப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் காய்கறிச் சந்தைகள் அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு சந்தையிலும் 30 காவலர்கள் உள்பட 70 சுகாதாரப் பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத வியாபாரிகள், பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்திகள் எதிரொலி: ம.பி.யிலிருந்து காரைக்கால் மாணவர்கள் 17 பேர் மீட்பு!

Last Updated : May 15, 2020, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.