திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை, பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடம்பன்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் வாழை, பலா, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை மூட்டையில் கட்டி குதிரைகளில் ஏற்றி வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்வர். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்யப்படும்.
அந்த வகையில், சிறுமலையில் கரடுமுரடான மலைப் பகுதிகளில் விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குதிரைகளுக்கு பொங்கல் படைத்து விவசாயிகள் கொண்டாடினர்.
இதையும் படிங்க: முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?