திண்டுக்கல் மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கரோனா பெருந்தொற்று தாக்கத்தின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், இங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வேலை இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். குறிப்பாக சுமங்கலி திட்டத்தின் கீழ் பணியாற்றி மீட்கப்பட்ட பெண்களும், பல்வேறு நூற்பாலைகளில் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளிகளும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, 375 பெண்களுக்கு ஹோப் மற்றும் கேர் டி சார்பாக ரூபாய் 1000 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் கரோனா நிவாரணமாக வழங்கபட்டன. பின்னர், அந்த பெண்களுக்கு வேடசந்தூர் சட்ட பணிகள் ஆணை குழு சார்பாக வழக்கறிஞர் வளர்மதி தலைமையில், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்தும், அதற்கான சட்ட ஆலோசனைகள் குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும், பெண்களுக்கு நடைபெறும் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் ஹோப் பழனிசாமி, மேனகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'கரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம், மருத்துவர்கள் செவிலியர்கள் உழைப்பை கொச்சைபடுத்தாதீர்கள்'