திண்டுக்கல்: சிலுவத்தூர் சாலை பகுதியில் அமைந்து உள்ளது ஏர்போர்ட் நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் தனித்தனியாக மனைகளை விலைக்கு வாங்கி கட்டிய வீடுகளை கொண்ட பகுதியாக உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் அரசு ஊழியர் முதல் தனியார் நிறுவன உரிமையாளர்கள் வரை குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் கவிதா என்பவர் கடந்த 2 மாதம் முன்பு வீடு ஒன்றை விலக்கி வாங்கி தனது கணவர் மற்றும் மகனுடன் இப்பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இப்பகுதியில் குடிருப்போர்கள் இணைந்து ஏர்போர்ட் நகர் குடியிருப்போர் நல சங்கம் என நலச்சங்கம் ஒன்றை அமைத்து இருந்துள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக சந்திரசேகரன் என்பவர் உள்ளார். செயலாளராக சுமதி என்பவரும் பொருளாளராக முனியாண்டி என்பவர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாத மாதம் ரூபாய் 500 சங்கத்திற்கு பராமரிப்பு கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக வந்த கவிதாவிடம் சந்தா கட்டணம் கேட்டுள்ளனர். நான் இப்போது தான் இங்கு வந்து உள்ளேன் அடுத்த மாதம் தருகிறேன், என சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியிருப்பு நல சங்கத்தினரால் பணியமர்த்தப்பட்ட கில்பர்ட் என்பவர் அப்பகுதியில் காவலாளியாக பணியில் இருந்து வருகிறார். நலச்சங்க தலைவர் காவலாளியை தொடர்ந்து பலமுறை அனுப்பி சந்தா கட்டணம் கவிதாவிடம் தொந்தரவு செய்துள்ளனர். கவிதா தர மறுத்த நிலையில் கவிதாவின் வீட்டிற்கு முன்பு வந்து ஆபாசமாக பேசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து மறுநாள் பணி முடிந்து வீட்டிற்கு வந்த பேராசிரியர் கவிதா மற்றும் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் குடியிருப்பு பகுதி நுழைவாயிலில் வந்த பொழுது அங்கே இருந்த காவலாளி மீண்டும் ஆபாசமாக பேசி கவிதாவையும் அவரது மகன் தாக்கியுள்ளார்.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பேராசிரியர் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில் பேராசிரியை தன்னை தாக்கியதாகவும் ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
பணிக்குச் சென்று திரும்பிய பெண் பேராசிரியை தாலுகா காவல் நிலையத்தில் சென்று தன்னையும் தனது மகனையும் குடியிருப்போர் நல சங்க தலைவர் தூண்டுதலின் பேரில் காவலாளி ஆபாசமாக பேசி தங்களை தாக்கியதாக புகார் மனு வழங்கினார்.
புகார் மனு மீது விசாரணையைத் துவங்கிய போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது காவலாளி பேராசிரியர், அவரது மகனை தாக்கிய வீடியோ இருந்ததை பார்த்துள்ளனர். ஆனால் தற்போது வரை தாக்கிய காவலாளி மீதும் அதற்கு உறுதுணையாக இருந்த சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தாலுகா காவல் துறையினர் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காவலாளி பேராசிரியை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: பழனியில் தானாக நகன்ற ஆட்டோ.. வைரலாகும் வீடியோ