ETV Bharat / state

Video: கிளாஸ் ரூமில் ஹாயாக லூட்டி அடிக்கும் 'மாப்பிள்ளை பெஞ்ச்' மாணவர்கள்

author img

By

Published : Apr 8, 2022, 10:33 PM IST

பழனியில் வகுப்பறையில் பேராசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் படுத்து தூங்குவதும், செல்ஃபோனில் ஐபிஎல் பார்ப்பதுமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஹாயாக ஐபிஎல் பார்க்கும் மாணவர்கள்
ஹாயாக ஐபிஎல் பார்க்கும் மாணவர்கள்

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின்கீழ் பள்ளி, கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கிவருகின்றன. அதில், பழனி - திண்டுக்கல் சாலையில் இயங்கிவரும் அருள்மிகு பழனியாண்டவர் பல்தொழில் நுட்பக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பல்தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வகுப்பறை ஒன்றில் பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, மாணவர்கள் சிலர் தரையில் படுத்து தூங்குவதும், சில மாணவர்கள் செல்ஃபோனில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஹாயாக ஐபிஎல் பார்க்கும் மாணவர்கள்

படிக்கும் வகுப்பறையில் பேராசிரியர் இருக்கும்போது‌ மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் இந்த வீடியோ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video: 'சியேர்ஸ்... கல்லூரிக்குள் கட்டிங் போட்ட மாணவிகள்'- அதிரடி காட்டிய கல்லூரி நிர்வாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.