ETV Bharat / state

கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் விழுந்த கார் விபத்து - கார் விபத்து

கொடைக்கானல் செண்பகனூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வந்தவர்களின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

50 அடி பள்ளத்தில் விழுந்த கார்
50 அடி பள்ளத்தில் விழுந்த கார்
author img

By

Published : May 28, 2022, 10:50 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வத்தலகுண்டு பிரதான சாலை மற்றும் எரி சாலை, அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.

இந்நிலையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நுர் முகமது கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். இவரும் இவரது மனைவி ரம்யா சுல்தானா, இரண்டு மகன்கள் அலிகா, அமினா ஆகியோர் கொடைக்கானலை சுற்றிப் பார்த்துவிட்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கொடைக்கானல் அருகே செண்பகனூர் பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

50 அடி பள்ளத்தில் விழுந்த கார்

பின்னர், சம்பவம் இடத்திற்கு வந்த அவசர ஊரதியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த இருவரை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பூந்தமல்லியில் தினமும் திருடு போகும் இருசக்கர வாகனங்கள்…. பொதுமக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.